தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்திடம் யார் நீங்க என்று கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ரஜினிகாந்த் மருத்துவமனையில் உள்ள ஒவ்வொருவரையும் சந்தித்தார். அப்போது சந்தோஷ்ராஜ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து யார் நீங்க என கேட்டார். அதற்கு ரஜினி நான்தான்பா ரஜினிகாந்த் என கூறினார். 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது வராத ரஜினி தற்போது வந்தது குறித்து அந்த இளைஞர் கேள்வி எழுப்பினார்.

இதனால் ரஜினியின் முகம் மாறியது. அதன் பின்னரே ரஜினி கோபமடைந்து செய்தியாளர் சந்திப்பில் எரிச்சலடைந்தார். இந்த நிலையில் சந்தோஷ்ராஜ் ரஜியை பார்த்து யார் நீங்க என கேட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ரஜினியின் இமேஜ் டேமேஜ் ஆக அவரது ஆதரவாளர்கள் தேசியக்கொடியை எரித்த திலீபனுக்கும் சந்தோஷ்ராஜுக்கும் தொடர்பு உள்ளதாக ஒரு புகைப்படத்தை பரப்பி அவரை சமூக விரோதி போல சித்தரித்தனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த சந்தோஷ்ராஜ், தனக்கும் தேசியக்கொடியை எரித்து வழக்கில் சிக்கிய திலீபனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் நான் திலீபனை பார்த்ததே இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்நிலையில் எனக்கும் திலீபனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி என்மீது வழக்கு பதிவு செய்ய முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் எனது எதிர்காலம் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.