சென்னையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி போலீசாரிடம் சிக்கியுள்ள சஞ்சீவின் லேப்டாபில் இருந்த வீடியோக்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த விவகாரம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த விடுதியை நடத்தி வந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குளியலறை உள்ளிட்ட மற்ற மறைகளில் மொத்தம் 9 ரகசிய கேமாரக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், என்னென்ன வீடியோக்கள் சஞ்சீவ் கைவசம் இருந்தன என அங்கு தங்கியிருந்த பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

சஞ்சீவின் லேப்டாப்பை போலீசார் சோதனை செய்த போது, அதில் இருந்த வீடியோக்களை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தானர். ஆனால், அந்த வீடியோக்களை காப்பி எடுக்கும் முன்பே போலீசாரிடம் தான் சிக்கிவிட்டதாக சஞ்சீவ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அங்கு தங்கியிருந்த பெண்கள் நிம்மதி அடைந்தனர்.