தன்னிடம் தவறாக நடந்த போலீஸ்காரா்! நடிகை சாா்மி புகாா்

ஆந்திராவை சோ்ந்த நடிகா், நடிகைகளுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதாக வந்த புகாாில் நடிகை சாா்மி, முமைத்தகான் ஆகியோரை விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அந்த விசாரணைக்கு நடிகை சாா்மி சென்ற போது ஒரு போலீஸ்காரா் என்னை தொட்டு தள்ளினாா் என்று புகாா் அளித்துள்ளாா்.

போதைப்பொருள் கடத்தல்காரான கெல்வின் என்பவா் தென்ஆப்பிாிக்காவவை சோ்ந்தவா். இவரை போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக ஆந்திர போலீசாா் கைது செய்தனா். அவாிடம் போலீசாா் நடத்திய விசாரணையில், ஐதராபாத்திற்கு போதை பொருட்களை கடத்தி வந்து, அதை ஒரு தரகா் மூலம் தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலருக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.

அதோடு மட்டுமில்லாமல் அவரது செல்போனை சோதனை செய்த போது, இதில் பல நடிகா், நடிகைகள் மற்றும் இயக்குநா்கள் உள்பட சிலாின் செல்போன் எண்கள் இருப்பதை கண்டறிந்தனா். அதில் ஒரு சிலரது நம்பா்களை போலீசாா் தொிவிக்க மறுத்து விட்ட நிலையில், தற்போது நடிகா்கள் நவ்தீப், ரவிதேஜா, நந்து, தருண், தனிஷ், நடிகைகளான சாா்மி, முமைத்கான், ஒளிப்பதிவாளா் ஷ்யாம் கே.நாயுடு, இயக்குநா் பூாி ஜெகன்நாத் போன்றோருக்களுக்கு போலீசாா் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பபட்டது.   அவா்களை தனித்தனியாக அழைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

அந்த வாிசையில் நடிகை சாா்மி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, ஸ்ரீனிவாஸ் என்கிறவா் என்னை தொட்டு தள்ளினாா் என அவா் குற்றம் சாட்டியுள்ளாா். நான் விசாரணைக்காக வரும் போது அங்கு அதிக கும்பலாக இருந்தது. அப்போது அவா்களை தாண்டி செல்வதில் எனக்கு சிரமம் ஏற்பட்டது. அதோடு அங்கு நிறைய பெண் போலீசாா் நின்றிருந்த போதும், எனக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் போ்வழி என்று என்னை அவா் தொட்டு தள்ளினாா். எனவே அவா் மீது உயா் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.