மோசடி விளம்பரத்தில் நடித்ததாக ஹிரித்திக் ரோஷன் மீது சென்னையில் வழக்குப்பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் இவர் குர்கானை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த முரளிதரன் என்பவர் அந்த நிறுவனத்தின் ஸ்டாக்கிஸ்ட் ஆனார்.

ஆனால் அந்த நிறுவனம் குறித்த நேரத்தில் பொருட்களை வழங்கவில்லை எனவும், தேக்கமடைந்த பொருட்களை திரும்ப அளித்தபோது பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்கள் அந்த நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் நடித்த ஹிரித்திக்ரோஷன் மீதும் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது