திருச்சி பெண்கள் சிறை அதிகாரி செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணிபுரிந்து வந்தவர் செந்தமிழ்செல்வி. இவர் தங்கியிருந்த அறையில் நேற்று முன் தினம் மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க பாஸ்-  போலி கையெழுத்து போட்டாரா தனுஷ் ? - முற்றும் விவகாரம்

தனது மகள் செந்தமிழ்ச்செல்வி, வெற்றிவேல் என்கிற காவல் அதிகாரியை ஒருவருடமாக காதலித்ததாகவும், அந்த காதலை ஏற்காத வெற்றிவேலின் அண்ணன் கைலாசம் மற்றும் அவரின் மனைவி ராஜசுந்தரியும் சேர்ந்து சாதி பெயரை சொல்லி திட்டியதால் அதில் மனமுடைந்து என் மகள் தற்கொலை செய்து கொண்டார் என செந்திமிழ் செல்வியின் தந்தை செல்லப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால் - தாணு பகீர் தகவல்

போலீசாரின் விசாரணையில் வெற்றிவேலும் செந்தமிழ்ச்செல்வியை காதலித்து ஏமாற்றியதும், வருகிற 6ம் தேதி வேறு ஒரு பெண்னை அவர் திருமணம் செய்ய தயாராக இருந்ததும் தெரியவந்தது. எனவே, தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேல், அவரது சகோதரர் கைலாசம், ராஜசுந்தரி ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மதுபோதையில் தங்கையை சீரழித்த அண்ணன்!

இந்நிலையில், அவர்கள் மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.