ஓடும் ரயிலில் பெண் சிறைக் கைதி ஒருவரை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திஹார் சிறையைச் சேர்ந்த பெண் கைதி ஒருவரை ஒரு கான்ஸ்டபிள் மற்றும் 2 பெண் காவலர்கள் கொண்ட குழு ஒன்று மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது. அங்கிருந்து திருப்பி அழைத்துச் செல்லும்போது ரயிலில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டுமென கைது கேட்டுள்ளார்.

அதற்காக கூட்டிச் சென்றபோது காவலுக்கு இருந்த இரண்டு பெண் காவலர்களையும் போகுமாறு உடன் இருந்த கான்ஸ்டபிள் கூறிவிட்டு கழிவறைக்குள் சென்ற அவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதை யாரிடமும் கூறக்கூடாது என அந்தப் பெண்ணை அவர் மிரட்டியுள்ளார்.

சிறைக்குத் திரும்பும் வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சிறை மருத்துவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த கான்ஸ்டபிள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.