மும்பையில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் குற்ற வழக்கில் சிக்கியிருக்கும் அவரது மகனை விடுதலை செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் போலிஸ் ஒருவர்.

போதைக்கு அடிமையாகி குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் தன் மகனின் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்துள்ளார் அந்த தாய். அப்போது அவரை சந்தித்த தினேஷ் பார்மர் எனும் போலிஸ்காரர் அவர் மகன் மேலும் சிலப் பொய்வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்க தான் சொல்லும் இடத்துக்கு வர சொல்லியிருக்கிறார்.

மகனுக்காக அவர் சொல்லிய இடத்துக்கு சென்ற அந்த தாயை அவர் பாலியல் பலாத்காரம் செய்து அதைப் புகைப்படம் எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரத்துக்கு வற்புறுத்தவே  அதற்கு அந்த தாய் மறுத்துள்ளார். இதனால் கடுப்பான தினேஷ் பார்மர் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதை அடுத்து இந்த விஷயத்தை அறிந்த அந்த தாயின் மகள் போலிஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலிஸார் புகாரை எடுக்க மறுக்க அந்தப் பெண் திக்குளிப்பேன் என மிரட்டியதை அடுத்து புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் சம்மந்தப்பட்ட தினேஷ் பார்மர் தலைமறைவாகியுள்ளார்.