போலீஸ் கண்காணிப்பில் விஜய் சேதுபதி ? அதிர்ச்சி தகவல்

vijaysethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல்வேறு பிரச்சனைகளாக குரல் கொடுத்து வருபவர். நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களில் தன் மூக்கை நுழைத்து அதற்காக வாதாடி வருகிறார். நாட்டில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து வரும் இவர் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி சமூக சார்ந்த பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து வரும் இவரை பாராட்டாதவர்களை இல்லை. அதனால் என்னவோ ரசிகர்களுக்கும் இவரை ரொம்பவும் பிடித்து இருக்கிறது.

இப்படி சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு அதிக குரல் எழுப்பி வரும் விஜய் சேதுபதியை தேடிவந்து, பல்வேறு குழுவினர் சந்தித்து பாராட்டுகிறார்களாம். அப்படி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறாராம் விஜய் சேதுபதி. அப்படி விஜய்சேதுபதியை தேடி வந்து சந்திக்கும் குழுக்களில் சில ஆளும் அரசுக்கு எதிராக செயல்படுபவையாம். இந்த தகவலை அறிந்த போலீசார் விஜய் சேதுபதியை கண்காணிக்க துவங்கினார்களாம்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சிலர் விஜய் சேதுபதியிடம் கேட்டார்களாம், அதற்கு அவர் பதிலளிக்கையில், நான் இந்த சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். அதனால் தான் என்னவோ சமூகத்தில் எழும் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். என்னுடைய கருத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்னை தேடி வந்து சந்திக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுபவர்கள் அவர்களது குழுக்கள் எப்படி பட்டது, அவர்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை உடையவர்களா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது எனக்கு தேவையும் இல்லை என்றார்.