கேரளாவில் நகரப்பேருந்தில் பெண் ஒருவருக்கு அருகில் அமர்ந்ததால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் காயங்குளம் பகுதியில் செக்கன் குளக்கரா எனும் பகுதியில் இருந்து ஹரிபாட் வரை செல்லும் பேருந்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் இடம் இல்லாததால் பெண் வரிசையில் காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்துள்ளார். இதனால் அந்த சீட்டில் அமர்ந்திருந்த பெண் அதிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் காவல்துறையில் வேலை செய்யும் தன் கணவனிடம் இது பற்றி அலைபேசியில் கூறியுள்ளார். பஸ் ஹரிபாட்டில் வந்து நின்றதுமே போலிஸார் மானுபிரசாத்தைக் கைது செய்துள்ளனர். அவர் மேல் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.