பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக முக்கிய அறிவிப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் திருநாவுக்கரசு, உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்

தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.