Pollachi Rape Case: 
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் கொடுமை செய்து அதை வீடியோ எடுத்த வழக்கில்முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிரகாரித்தது.

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை ஆபாச படம் எடுத்து மிரட்டி தொந்தரவு கொடுத்த வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கடந்த 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கடந்த 5-ந்தேதி மாக்கினாம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  பொள்ளாச்சி சம்பவம் - வலுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் 15 நாட்கள் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீண்டும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் 3 பேருக்கும் மேலும் 15 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  Top 4 signs to find out fake people online. Girls Be-aware !!

இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதே இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுகரசின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்தார்.