சிலை கடத்தல் வழக்கை அதிரடியாக விசாரித்து வரும் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சிலை கடத்தல் சம்மந்தமான வழக்கை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம ஏற்க மறுத்துவிட்டது. பொன்மாணிக்கவேல் தமிழகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டு வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அடடே! தமிழக அரசை கமலே பாராட்டிட்டாரே...

இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷா வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.