பிரபு தேவா தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் முகில் செல்லப்பன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். படத்திற்கு போலீஸ் அதிகாரியும் தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேலின் பெயரே படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேல் மிக சிறந்த போலீஸ் ஆளுமையாக அறியப்பட்டவர் சமீபத்தில் 50 வருடம் முன் காணாமல் போன ராஜராஜன் சிலையை குஜராத் சென்று மீட்டவர். சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உள்ளிட்ட பெரும் கேடிகளை கைது செய்து சாதனை படைத்தவர். மிகச்சிறந்த இயக்குனராக அறியப்பட்ட வி.சேகரையும் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்தவர்.

இப்படி அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன மிக சிறந்த போலீஸ் அதிகாரியான இவர் பெயரை இப்படத்திற்கு வைத்திருப்பதால் உண்மை சம்பவம் கலந்த கதையாக இருக்குமோ என பல ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது