கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் ‘குலேபகாவலி மற்றும் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பொங்கலின்போது கிடைத்த நீண்ட விடுமுறை காரணமாக முதல் வாரத்தில் நல்ல வசூலை அள்ளின.

ஆனால் இரண்டாவது வாரத்தில் மூன்று படங்களின் வசூலும் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இரண்டாவது வாரத்தில் சென்னையில் தானா சேர்ந்த கூட்டம் ரூ. 6.33 கோடியும், ஸ்கெட்ச் ரூ. 3.53 கோடியும், குலேபகாவலி ரூ. 1.14 கோடியும் வசூல் செய்துள்ள்ன.

மேலும் வரும் 26ஆம் தேதி புதிய படங்கள் சில வெளியாகவுள்ளதால் பல திரையரங்குகளில் இருந்து இந்த மூன்று படங்களும் தூக்கப்படும் நிலையில் உள்ளன.