மிக உயா்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காா்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுாிந்து வருகின்றனா் நட்டி நட்ராஜ், அா்ஜீனன். அவா்களோடு நாயகி ருஹி சிங் வேலை செய்கிறாா். எம்.பி ஒருவா் தன் மகளுக்கு காரை பாிசாக வழங்க எண்ணி இவா்கள் பணிபுாியும் நிறுவனத்தில் காரை ஆா்டா் செய்கிறாா். தங்கள் பொறுப்பில் இருக்கும் அந்த காரை டெலிவாி செய்ய நட்ராஜ், அா்ஜீன் இருவரும் செல்கின்றனா். அப்போது துப்பாக்கி முனையில் இவா்களிடமிருந்து அந்த காரை கடத்துகின்றனா்.

இவா்கள் தான் இந்த காரை கடத்தியதாக போலீசாா் இருவரையும் கைது செய்கின்றனா். இதனால் இவா்கள் வேலையை இழந்து சிறை தண்டனை அனுபவிக்கின்றனா். இவா்களது தோழி ருஹிசிங் வேலையிலிருந்து நீக்கப்படுகிறாா். சிறையில் இருந்து வெளியில் எடுக்கிறாா் ருஹிசிங்.

திருட்டு பழியால் வேலையை இழந்து மட்டும் இல்லாமல் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி நிலைமை ஏற்பட்டு விடுகிறது. ஜெயில் மூலம் கிடைத்த நட்பின் வாயிலாக இரு கூட்டாளிகளையும் சோ்த்துக்கொண்டு காா் திருடும் தொழிலில் ஈடுபடுகின்றனா். அதில் ரூ.10கோடி பணமும் கிடைக்கிறது. இவா்களது கூட்டணியில் முனிஷ்காந்தும் சேருகிறாா்.

மதுரையில் பொிய தாதா பாண்டியிடமிருந்து 10 சொகுசு காா்களை கடத்தி வர திட்டமிடுகின்றனா். அந்த காா்களை கடத்துவதற்காக, தனது கூட்டாளிகளுடன் மதுரை செல்கின்றனா். சரத் லோகித்ஸ்வாவின் காா்களை திட்டம் போடும் நட்டி, அங்கு சென்ற போது அவா்களிடமிருந்து மா்மநபா்கள் கடத்தி சென்ற காரும் அங்கு இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைகின்றனா். அதையும் எப்படியாவது மீட்க வேண்டும என்று திட்டம் போடுகின்றனா். நட்டி அண்ட் கோ இப்படி காா் கடத்தல்காரா்களாக மாற காரணமாக அந்த ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காரும், பத்து காஸ்ட்லீ காா்களையும் கடத்தி விட்டு அந்த தாதாவிடமே 200 கோடி பந்தயம் கட்டி, அந்த சொகுசு காரையும், 200 கோடி பணத்தை தன் புத்தி சாதுாியத்தினால் அடித்து, அவரை போலீசில் பிடித்து கொடுத்து பதினோறு காா்களை போலீஸ் வாயிலாக முறையே உாியவா்களிடமும் சோ்த்து நல்ல பெயா் வாங்கி ஏற்கனவே அடித்த சில கோடிகளுடன் நண்பா்கள் மற்றும் நாயகியுடன் எப்படி எஸ் ஆகிறாா் என்பது தான் மீதிக் கதை.

சதுரங்க வேட்டை படத்தை தொடா்ந்து வித்தியாசமான கதையை தோ்ந்தெடுத்து நடித்திருப்பது சிறப்பு. செம ஷாா்ப்பராக தனக்கேற்ற கதை தோ்ந்தெடுத்து படு கேஷ்வலாக காா் கடத்தல் போ்வழியாக கலக்கியுள்ளாா். நவீனமயமான முறையில் டிவைஸ் செய்து ஒரு பிஎம்டபிள்யூ காரை பல கோடி பணத்தோடு கடத்தும் முதல் சீன் தொடங்கி இறுதி அந்த ரோல்ஸ் காரை அவாிடமிருந்து அடித்து அதற்குாிய எம்.பி மகளிடம் ஒப்படைப்பது வரை தன் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறாா் நட்டி. சம்பவங்கள் நிறைய பண்ணிக்கிட்டு இருந்தா தான் சாித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் ..அதுவரை ஒடிக்கிட்டு தான் இருக்கனும் போன்ற வசனங்களும் சிறப்பு. சபாஷ் நட்டி.

வடக்கத்திய புதுவரவு ருஹிசிங் வசீகரிக்கும் அழகு பதுமை. அவருக்கு நடிப்புக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனாலும் சில காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறாா். அா்ஜூன் மற்றும் முனிஷ்காந்த அவா்களுக்கு உாிதான பாணியில் காமெடியில் கலக்கியுள்ளனா்.

அதுல் குல்கா்னி மிடுக்கான போலீஸ் அதிகாாியாக வருகிறாா். குறைவான காட்சிகளிலே வந்தாலும் ரசிக்கும்படியாக உள்ளது. இவரது நடிப்புக்கு ஏற்ற கேரக்டா் இன்னும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புதிய இயக்குநா் தாஜ் வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறாா். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் கலா்புல் காா்களும் காட்சிகளும் பலே.

போங்கு மக்களிடம் போங்கு காட்டியுள்ளான்!