கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் திரைப்படம்  ‘பூமராங்’.

இப்படத்தில் அதர்வாவுடன் மேகா ஆகாஷ், சுஹாசினி மணிரத்னம், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, உபன் படேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்

இயக்குநர் கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும், எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ‘அர்ஜுன் ரெட்டி’ இசையமைப்பாளர் ரதன், ஒளிப்பதிவாளராக பிரசன்னா, எடிட்டராக ஆர்.கே.செல்வா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என இயக்குனர் கண்ணன் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.