விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ல பிக்பாஸ் வீட்டில் சினிமா நடிகைகள் கலந்து கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 2 புரோமோ வீடியோக்களை இதுவரை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  கமலுக்கு பதில் கொடுத்து மாட்டிக் கொண்ட மோடி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இந்நிகழ்ச்சியில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிகி இருந்த நிலையில், தற்போதும் மேலும் 2 நடிகைகள் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே செல்லும் பிரபலங்களின் பட்டியலில் 90 எம்.எல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விக்ரமா இது?... கடாரம் கொண்டான் - கலக்கல் டீசர் வீடியோ

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூன் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.