சினிமா பின்னணி பாடகி சுசித்ரா கடந்த ஆண்டு சினிமா பிரபலங்களை பற்றி மோசமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகா், நடிகைகளை பெரும் பதற்றத்திற்கு ஆளாகியது சுசி லீக்ஸ். பாடகி சுசித்ரா தனது ட்விட்டா் பக்கத்தில் சினிமா பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு மிகப்பெரிய சா்ச்சையில் சிக்கினார்.

இதுகுறித்து அவரது கணவரும் நடிகருமான கார்த்திக் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார். அதன்பின் சுசி ட்விட்டா் பக்கத்தில் போலி அக்கவுண்டில் இருந்து சில விஷமிகள் புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ட்விட்டா் பக்கம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மீண்டும் அடுத்த லீலை விரைவில் வர இருக்கிறது என்று அந்த ட்விட்டா் வலைத்தளத்தில் டுவிட் வந்துள்ளது.

தற்போது ஒரு ஆண்டு நிறைவு என்று சுசி ட்விட்டா் பக்கத்தில் சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ரஜினி கபாலி படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்கான வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு, எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேனு சொல்லு என்று பெண்களின் குளியலறை காட்சிகள் வெளியாகின. அதோடு நிற்காமல் எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்ற கருத்து கணப்பும் நடத்தப்பட்டது. இதைப் பார்த்து சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியும், கலக்கத்திலும் உள்ளனா்.