பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா என்கிற நிகிதா(வயது 32) . கடந்த வெள்ளிக்கிழமை கட்டாக்கில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் இருந்த அவர் திடீரென தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிகிதாவை, கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நிகிதா ‘Chori chori mana chori’, ‘Maa ra Panatakani’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘Tapasya’ and ‘ACP Nikita’ ஆகிய ஒடியா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.