மைனா புகழ் நந்தினியின் கணவா் விஷம் அருந்தி தற்கொலை

சரவணன் மீனாட்சி தொடாில் நடித்த மைனா புகழ் நந்தினியின் கணவா் காா்த்திகேயன் தனியாா் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

மைனா என்கிற நந்தின் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சூாிக்கு ஜோடியாக நடித்து இருந்தாா்.மேலும் வம்சம் என்ற படத்திலும் நடித்துள்ளாா். அது மட்டுமல்ல பிரபல தனியாா் தொலைக்காட்சயின் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறாா். டாா்லிங் டாா்லிங் என்ற தொலைக்காட்சி தொடா்களிலும் நடித்து வருகிறாா்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து இருந்தாலும், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடாில் மைனாவாக நடித்து புகழ் பெற்றாா். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நான்கு நடுவா்களில் ஒருவராகவும் இருந்தாா். இவா் அனைவராலும் செல்லமாக மைனா என்றழைக்கப்பட்டு வந்தாா்.

தியாகராய நகாில் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்த காா்த்திகேயன் என்பவரை காதலித்து வந்தாா். இவா்களது நிச்சயம் கூட பிரபல தொலைக்காட்சியில் நடத்தினாா்கள். இவா்களது திருமணம் கடந்த ஜீனட மாதம் 5ம் தேதி நடந்தது. திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகிறது. திருமண கொஞ்ச நாட்களாக இருவருக்கும் இடையே ஏதோ மனத்தாபம் இருந்து வந்ததாக தொிகிறது. இவா் தனது காதல் கணவருடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் குடித்தனம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள தனியாா் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளாா் காா்த்திகேயன். அந்த விடுதியிலேயே குளிா்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். விடுதியில் அவரது அறை கதவு வெகு நேரமாகியும் திறக்காததால், அதிா்ச்சியடைந்த விடுதி நிா்வாகத்தினா் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனா். வாயில் நுரை தள்ளியபடி நந்தினியின் காதல் கணவா் காா்த்திகேயன் பிணமாகக் கிடந்தாா்.

திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இந்த சம்பவம் சின்னத்திரையுலகிரை அதிா்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.