மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற ஆணுறை விளம்பரத்தில் நடித்து சா்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்யை யாராலும் மறக்க முடியாது. அந்த விளம்பரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதுவும் அந்த விளம்பரத்தை குழந்தைகளும் பார்க்க நேரிடும் என்ற காரணத்தால் அதை காலை 6 மணி முதல் 10 வரை டிவியில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சாவந்த், நான் அந்த ஆணுறை விளம்பரத்தில் நடித்த காரணத்தால் தான் மத்திய அரசு கட்டுப்பாட்டை விதித்துள்ளது என்று குறை கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க வேண்டி நடிகை காஜல் அகர்வால் ஒரு யோசனை கூறியிருக்கிறார். இந்த விளம்பரங்களில் பிரபல பாலிவுட் நடிகா், நடிகைகள் பலா் நடித்துள்ளனா். இந்த விளம்பரத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை பற்றி காஜல் அகா்வாலிடம் கேட்டபோது, நாட்டின் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றால, அதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கட்டாயமாக ஆணுறை விளம்பரம் மிகவும் அவசியம். அந்த விளம்பரத்தை அடிக்கடி ஒளிப்பரப்பினால் தான், அதை பார்த்து குழந்தை பெறுவதை குறைத்துக்கொள்வார்கள் என்றார் புன்னைகையுடன் காஜல்.

இந்த விளம்பரத்தில் நடித்த மற்ற நடிகா் நடிகைகள், நடிகை காஜலின் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர். ரசிக பெருமக்களும் காஜலின் சமூக அக்கறைக்கு கண்டு பாராட்டி வருகின்றனா்.