பவர்பாண்டி முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. ராஜ்கிரண்,பிரசன்னா,சாயா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கௌரவ வேடத்தில் தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில் படம் நேற்று வெளியானது. அனைத்து பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் விமர்சனங்களை பார்த்தால் தனுஷ் இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல்நாள் சென்னையில் மட்டும் 57 லட்சங்கள் வரை வசூல் ஆனதாக கூறப்படுகிறது.