பவர் பாண்டி தலைப்பு மாற்றம் – காரணம் என்ன?

நடிகர் ராஜ்கிரனை வைத்து நடிகர் தனுஷ் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

பல படங்களில் நடித்துள்ள தனுஷ், முதல் முறையாக ராஜ்கிரனை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான முதல் டிரெய்லரில் ராஜ்கிரண் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் வெளியான இரண்டாவது டிரெய்லரில் தனுஷ் தொடர்பாக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தில் ராஜ்கிரணின் இளவயது கதாபாத்திரமாக தனுஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில் வரி விலக்கு காரணமாக இப்படத்தின் தலைப்பு ப.பாண்டி என மாற்றப்பட்டுள்ளது.