மதுரையில் உள்ள தன்னுடைய குடும்ப குலதெய்வ கோவிலுக்கு தனுஷ் சென்றிருந்த போது, அவரின் சொகுசு வாகனத்திற்கு மின்சாரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

நடிகர் தனுஷ், தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா, தாய், சகோதரர் செல்வ ராகவன், சகோதரிகள், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் மதுரை தேனி மாவட்டம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டார்.அப்போது ஓய்வு எடுப்பதற்காக ஒரு கேரவான் என அழைக்கப்படும் சொகுசு வாகனமும் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், அந்த சொகுசு வாகனத்திற்கு ஊராட்சி தெருவிளக்குகளுக்கான மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள், இதுபற்றி மின்சார துறை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர்.  இதன் அடிப்படையில் ஆய்வு செய்த அதிகாரிகள் 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததோடு, அந்த சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வாகனதை ஓட்டிய ஓட்டுனர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் ரூ.15 ஆயிரம் அபராதத்தை செலுத்திய தனுஷ் தரப்பு அங்கிருந்து வாகனத்தை மீட்டு சென்றது.