தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டவர் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சீனிவாசன். பலர் கேலி செய்தாலும் அதனையும் தனது வெற்றிக்கான வழி என சென்றுகொண்டிருப்பவர் அவர்.செக் மோசடி வழக்கில் கைது செய்யப்படிருந்த அவர்  சமீபத்தில் வெளியே வந்தார். இந்த நிலையில் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்,

தெரியாமல் செய்த தவறுக்காக சிறை தண்டனையை அனுபவித்தேன்.என் நண்பர்களே என்னை பழி வாங்கிட்டாங்க என்றார்.  மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அணுகினார்கள்.தனிப்பட்ட வேலை காரணமாக என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த சீசன் இல்லையென்றாலும் அடுத்த சீசனில் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வேன் என்றார்.