எழுத்தாளர் பிரபஞ்சம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

1945 ஏப்ரல் 27ம் தேதி புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம் ஆகும். இவர் ஏராளமான சிறுகதை மற்றும் நாவல்களைஅவர் எழுதியுள்ளார். வானம் வசப்படும் என்ற நூலுக்காக 1995ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றுள்ளார்.

சமூக பொறுப்புள்ள பிரபஞ்சன் பெண்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்து எழுதும் ஒரு சில எழுத்தாளர்களில் பிரபஞ்சன் முக்கியமானவர் ஆவார்.

57 ஆண்டுகுகளுக்கும் மேல் இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்த பிரபஞ்சன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 73. பிரபஞ்சனின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.