பிரேமம் என்ற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவர் மனதிலும் நீங்காத நிரந்தர இடம் பிடித்தவர் சாய்பல்லவி.

அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றிவர் சாய்பல்லவி தமிழ் நாட்டின் கோவையை சேர்ந்தவர்.

இவர் மாரி2 படத்தில் நடித்த போது பிரபுதேவா நடன அசைவுகளை சொல்லி கொடுத்ததை பற்றி சற்று விளக்கி கூறியுள்ளார்.

10 வருடங்களுக்கு முன் ஒரு மேடையில் பிரபுதேவா சாரை சந்தித்தேன்.

‘மாரி 2’ படத்தில் அவரது நடன அமைப்பில் ஆடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் சற்று பயமாகவே இருந்தது.

அப்போதுதான் ஏற்கனவே பிரபுதேவா சாரை நான் சந்தித்த அனுபவத்தை மனதுக்குள் கொண்டுவந்தேன். அதுவே எனக்கு உற்சாகத்தை தந்தது. பிரபுதேவாபோல் நடனம் ஆடினால் பெண்டு நிமிர்ந்துவிடும். எனக்கும் அவரது நடன அசைவில் ஆடும்போது அப்படித்தான் இருந்தது. இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.