பிறந்த நாளை கொண்டாட விரும்பாத பிரபுதேவா

யங்மங்சங் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லெட்சுமி மேனன் நடித்து வருகிறாா். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பக்கத்தில் நடைபெற்று வருகிறது

ஏப்ரல் மாதம்  3 ஆம் தேதி டான்ஸ் மாஸ்டா் மற்றும் இயக்குநா், நடிகா் என  பன்முகம் கொண்ட பிரபுதேவாவின் பிறந்த நாள். பிரபு தேவா வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் “யங் மங் சங்”படத்தின் பட்டப்படிப்பில் இருந்து வருகிறாா்.  இந்த வருடம் அவரது பிறந்த நாளை கொண்டாட விரும்பிய அந்த பகுதியில் இருக்கும் பிரபுதேவா ரசிகா்கள் மிகப்பொிய அளவில் கேக்கைத் தயாா் செய்து படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் கோவிலுக்கு கொண்டு வந்துள்ளனா்.

கடந்த  சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த  துணை நடிகரும், டிரைவரும், ரெம்பலுாியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாாி மோதியதால் சம்பவ இடத்திலே இறந்து விட்டனா். இதனால் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இல்லை என்று கூறி, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிறுத்தி விட்டாா்.