செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா

11:19 மணி

Loading...

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ‘தேவி’ படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய், ஜெயம் ரவியை வைத்து ‘வனமகன்’ என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவியை வைத்து ‘கரு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய்.

இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா மீண்டும் நடிக்கப்போவதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ‘தேவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, தொடர்ந்து ‘யங் மங் சங்’, ‘குலேசபகாவலி’, ‘மெர்குரி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கார்த்தி, விஷால் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை இயக்கி தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தை தான் கைவிட்டதாக பிரபுதேவா சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த படத்திற்கான தேதிகளை தற்போது ஏ.எல்.விஜய்க்காக பிரபுதேவா ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 17 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com