பிரபுதேவா நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2016-ஆம்
ஆண்டு வெளியான திரைப்படம்’தேவி’. இதில் பிரபுதேவாவிற்கு
ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று
மொழிகளிலும் ரிலீஸானது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே
நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  இனிமேதான் நீங்க பாக்கப்போறீங்க - கோவை சரளா பேட்டி

இந்நிலையில், பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் “ ‘தேவி 2’
படப்பிடிப்புக்காக கோவை சரளாவுடன் மொரீசியஸ்
செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான
படப்பிடிப்புமொரீசியசில் துவங்கியருக்கிறது. இப்படம் முதல்
பாகத்தின் தொடர்ச்சியா அல்லது மாறுபட்ட கதையா என்பது
பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தில்
தமன்னா நடிப்பதும் உறுதிசெய்யப்படவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  நடனப்புயலுக்கு விபரீத ஆசை! 'யங் மங் சங்' குறித்து சுவராஸ்ய தகவல்

இதற்கிடையில், பிரபுதேவா நடிப்பில் ‘யங் மங் சங்’, ‘ சார்லி
சாப்ளின்- 2’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர
இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, பொன் மாணிக்கவேல்,
தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.