கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட படம் சூப்பர் சிங்கர் பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களே.

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அமெரிக்க வாழ் தமிழர் பிரகதி. தொடந்து தமிழ் படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். இவரும் நடிகர் அசோக் செல்வனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக விவாத பொருளாக உள்ளது. இருவரும் காதலிக்கிறார்கள் என்றும்,விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்றும் செய்திகள் பரவின.

இதையும் படிங்க பாஸ்-  ஆனந்த கண்ணீருடன் கணவருக்கு முத்தம் - தீபிகா படுகோன் நெகிழ்ச்சி

இது உண்மையா வந்தந்தியா என ரசிகர்கள் குழம்பிக்கொண்டிருக்கையில் இதற்கான விடையை அளித்துள்ளார். எனக்கு தற்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும்,அவ்வாறு திருமணம் செய்துகொள்ள விரும்பினால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிப்பேன் என்றும் கூறினார்.