மேடையில் நடிகர் பிரஜன் தனது காதலை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினியுடன்) காதலை கூற அவர் கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

டிடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், பிரஜனிடம் அவர் தனது காதல் பற்றி பேசி கதறி அழுகிறார். அவரை சமாதானப்படுத்தும் பிரஜன் ‘என்னை திருமணம் செய்து கொள்’ எனக் கூற டிடி வெட்கப்பட்டு அவரை கட்டி அணைக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  திருமதி திவ்யதர்ஷினி செல்வி திவ்யதர்ஷினி ஆன கதை

பிறகுதான் தெரிந்தது இது டிடி தொகுத்து வழங்கும் ‘என்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ என்பது.

காதல் என்றால் கொடுப்பது. காதல் என்றால் புரிதல், சிறியதாக ஒரு காட்சியில் நடித்தோம். இது பிரஜன் கொடுத்த ஐடியா என அவர் பதிவிட்டுள்ளார்.