படப்பிடிப்பே துவங்கவில்லை ; ரூ.350 கோடி வசூல் செய்த பிரபாஸ் படம்

பாகுபலி ஹீரோ பிரபாஸ் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தின் இந்திய உரிமை ரூ.350 கோடியை வசூல் செய்துள்ளது.

நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதிலும், பாகுபலி2 படம் இதுவரை ரூ.1500 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படம் சாஹோ. இந்த படம் தெலுங்கு, தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படம் பிரபாஸிற்கு 19வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு கம்பெனி ரூ.350 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது..

இதுவரை எந்த படத்தின் வெளியீட்டு உரிமையும் இவ்வளவு அதிக விலைக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.