pregnant women

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத பெண் யூடியூப்பில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற போது, பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்திரபிரதேசத்தின் பாஹ்ரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், கோராக்பூரில் அறை எடுத்து தங்கி அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண் தங்கியிருந்த அறையிலிருந்து ரத்தம் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் அப்பெண்ணின் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண் குழந்தை பெற்ற நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அப்பெண்ணின் அருகில் இருந்த செல்போனை காவல் துறையினர் எடுத்துப் பார்த்ததில் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான வீடியோ ஓடி உள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.