கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபின் விஜயகாந்த்தை தனியே விட்டு சென்ற பிரேமலதா!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறினார். இதை தொடர்ந்து தேமுதிக அணி ,திமுகவுடன் கூட்டணியா? இல்ல அதிமுகவுடன் கூட்டணியா? என்று குழம்பி கொண்டிருந்த வேளையில் ஒரு வழியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது.

உறுதியாக கடந்த ஞாயிற்றுகிழமை ஒரு தனியார் ஓட்டலில்  அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி அமைப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தேமுதிகவிற்கு 4 சீட் ஒதுக்குவதாக அதிமுக அறிவித்தது. இதை தொடர்ந்து பேசிய தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா 21 சட்டமன்ற தேர்தலுக்கும்  அதிமுகவிற்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

பின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து பிரேமலதா, சுதீஷ் மற்றும் தேமுதிகவினர் விஜயகாந்தை மேடையிலே விட்டுவிட்டு வெளியே சென்றனர்.  இதனை கவனித்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை அழைத்து, வேலை முடிஞ்சதுன்னா அப்படியே போடுவீங்களா, கேப்டன பத்திரமா அழைச்சுட்டு போங்க என கூறினார்.

அதன் பின்  பிரேமலதா மற்றும் ஆதவாளர்கள் கேப்டனை பத்திரமாக அழைத்து சென்றனர்.Photo Credit – Dinamalar newspaper