தனுஷின் மாரி-2 படத்தில் பிரேமம் நாயகி

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த ‘மாரி’ படம் வியாபார ரீதியாக நல்ல வசூலை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய பாகத்தில் நடித்த தனுஷே இப்படத்தில் நடிக்கவும் முடிவு செய்தார். பாலாஜி மோகனே இயக்கவும் ஆயத்தமானார்.

இப்படத்திற்கான ஸ்கிரிப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்தது. தனுஷ் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்ததால், இப்படத்தில் பணிகள் ஆரம்பமாகமலேயே இருந்து வந்தது. தற்போது தனுஷ் இப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதால், இப்படத்தின் பணிகள் ஜெட் வேகத்தில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக இப்படத்தின் கதாநாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர். முந்தைய பாகத்தில் நடித்த காஜல் அகர்வால், தற்போது விஜய், அஜித் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்திவிட்டதால், இப்போதைக்கு அவரை அணுகினால் அதிக சம்பளம் கேட்பார் என்பதால், வேறு நாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முன் வந்தனர்.

அப்படி தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, ‘பிரேமம்’ நாயகி சாய்பல்லவியை இந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரையே ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது ‘மாரி-2’ படத்தில் ‘பிரேமம்’ நாயகி சாய்பல்லவி நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிற நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாய் பல்லவி தற்போது விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இது தமிழில் இவருக்கு இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.