தெலுங்கிலும் கலக்கும் பிரேமம் நடிகை

‘பிரேமம்’ படம் மூலம் மலையாளம், தெலுங்கு, தமிழ்,கன்னடம் என்ற நான்கு மொழி ரசிகர்களையும் தனது நடிப்பாலும், குருகுரு தன்மையாலும் பெரிதும் கவர்ந்தவர் சாய் பல்லவி.

இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான ‘பிடா’ இப்போது சக்கைப்போடு போட்டு வருகிறது. 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்பொது 25 கோடி வசூல் செய்துள்ளது. அவரின் அழுத்தமான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ‘பிடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரது மார்கெட் ஒரு படி மேலே உயர்ந்துள்ளது. விரைவில் இவரை தமிழிலும் பார்க்கலாம்.