மிஸ்டர் லோக்கல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காமெடி நடிகர் ரோபோ சங்கருக்கும் பத்திரிக்கையாளருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.

மிஸ்டர் லோக்கல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் பேசியது போது பத்திரிக்கையாளர்களை கிண்டல் செய்யும் விதமாக பேசினார்.

அப்போது ‘ பத்திரிக்கையாளர் ஷோவுக்கு அழைத்தாலே நான் போக மாட்டேன். அவர்கள் காமெடிப் படத்தைக் கூட உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டுதான் பார்ப்பார்கள். ஏன காமெடி படத்தை இவ்வளவு சீரியசாகப் பார்க்கிறார்கள்’ எனப் பேசினார். இதனால் எரிச்சலடைந்த ஒரு பத்திரிக்கையாளர் ‘ படத்தில் நல்ல காமெடி இருந்தால் நாங்கள் சிரிக்க மாட்டோமா ?’ என ரோபோ சங்கரைக் கேட்டார். இதனால் ரோபோ சங்கருக்கும் அந்த பத்திரிக்கையாளருக்கும் இடையே சலசலப்பு எழுந்தது.

பின்னர் பேசிய சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசி விழா மேடையை கலகலப்பாக்கினார்.