பிரேசில் நாட்டில் ஜோ டெய்சீரா ஃபரியா(76) என்ற மதபோதகர் வாழ்ந்து வருகிறார். இவர் மன நோய்களை குணப்படுத்துவதாக கூறி பலருக்கும் வைத்தியம் செய்து வருகிறார்.

ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரிடம் சிகிச்சைக்கு சென்ற டச்சு நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், அந்த மதபோதாகர் மனநோயாளிகளை பாலியல் ரீதியாக தூண்டிவிட்டு பலாத்காரம் செய்வதாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அவரின் பேட்டிக்கு பின், அந்த மதபோதகர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சுமார் 350 பெண்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர் மீது இவ்வளவு புகார்கள் குவிந்ததால் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு தலையை சுற்ற வைத்துள்ளது.

தனக்குள் 30 மருத்துவர்களின் ஆவிகள் இருக்கிறது. அதனால்தான் என்னால் பலருக்கும் சிகிச்சை அளிக்க முடிகிறது. அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது நான் அல்ல. எனக்குள் இருக்கும் மருத்துவர்களின் ஆவிகள்தான் என அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த வழக்கை எப்படி விசாரிப்பது என்ற குழப்பத்தில் போலீசார் தவிப்பதாக தெரிகிறது.