vani rani

சன் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் வாணி ராணி. ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த தொடரில் சுவாமிநாதன் என்ற வேடத்தில் நடிகர் பப்லு என்கிற ப்ரித்விராஜ் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் என் வாழ்க்கையில் மிக கொடுமையான சீரியல் பயணம் வாணி ராணி தான், என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி தான் வாணி ராணி. இந்த தொடரின் படப்பிடிப்பில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தேன். இந்த தொடரில் எங்களை டம்மி பீஸாக ஆக்கிவிட்டனர் என்று கோபமாக கூறினார்.