அமலாபால் நடித்த ‘திருட்டுப்பயலே 2’ நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து நிவின்பாலி நடிப்பில் ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கவுள்ள மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திர படத்தில் இருந்து திடீரென அமலாபால் விலகியுள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் இருந்து அமலாபால் விலகியதற்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது அமலாபாலுக்கு பதில் ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

நிவின்பாலி-ப்ரியா ஆனந்த் முதல்முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது