ஓவியாவை பார்த்தே ஆகனும்: ஆர்வமுடன் பிரபல நடிகை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகா்களின் மனத்தில் உச்சத்தில் இருக்கும் ஒவியாவை கண்டிப்பாக பாா்க்க வேண்டும் என்று நடிகை பிாியா ஆனந்த் கூறியுள்ளாா்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி தொண்டி எங்கும் பிரபலமானவர் ஓவியா. சினிமாவில் நடித்தபோது கிடைக்காத ரசிகர் பட்டாளம் பிக்பாஸ் மூலம் அவருக்கு கிடைத்துள்ளது. காரணம் அவருடை நேர்மையான அணுகுமுறை. பொது மக்கள் மட்டுமின்றி திரையுலகினரே அவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். அதில் நடிகை பிரியா ஆனந்தும் ஒருவர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், ஒவியா பற்றியும் கூறியிருந்தாா். அதுவும் ஒவியா இந்த நிகழ்ச்சியில் நான் நானாக தான் இருப்பேன் என்றும், வெகுளித்தனமான குணமும், துடுக்கான பேச்சும் நடிகை பிாியா ஆனந்துக்கு மிகவும் பிடித்து இருந்தாக கூறியிருந்தாா்.

இது குறித்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியாவிற்காகதான் பார்த்து வந்தேன். நான் இதுவரை ஓவியாவை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் எனக்கு ஓவியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது. நிச்சயம் பார்ப்பேன் என்றார்.