கல்லூரி காலத்திலேயே லிப்லாக் கொடுத்தேன் -பிரபல நடிகை ஓபன் டாக்

180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா ஆனந்த்.தொடந்து எதிர் நீச்சல்,அரிமா நம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் நடித்த கூட்டத்தில் ஒருவன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோசன் தொடர்பாக பேட்டி அளித்தார்.  அதில், எனது முதல் படமான 180ல் சித்தார்த்துடன் லிப்லாக் காட்சியில் நடித்தேன்.ஆனால் லிப்லாக் என்பது அது முதல்முறை கிடையாது. கல்லூரி படிக்கும்போதே லிப்லாக் கொடுத்துள்ளேன் என்று பேசினார்.

நடிகைகள் பலரும் தங்களது கடந்தகால விசயங்களை மறைக்கத்தான் விரும்புவார்களே தவிர பிரியா ஆனந்த் போன்று வெளிப்படையாக பேசமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.