பிரியா பவானிசங்கருக்கு மலர் டீச்சரால் வந்த அதிர்ஷ்டம்


 சின்னத்திரையில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். தற்போது மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளி திரைக்குள் நுழைந்துள்ளார். இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க சாய் பல்லவியும் ஒரு காரணம் எனக் கூறுகிறார்கள்.

 கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் மேயாத மான். மது என்ற குறும்படமே முழுநீள திரைப்படமாகி இருக்கிறது இந்தப் படத்தில் வைபவ் ஜோடியாக முதலில் சாய் பல்லவியைத்தான் தேர்வு செய்தனர். ஆனால் அவர்  நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு ஹீரோயினை தேடினர் படக்குழுவினர். அப்போது மெயிலில் வந்த பிரியாவின் புகைப்படத்தைப் பார்த்து ஆடிஷனில் தேர்வானவர் தான் பிரியா பவானி சங்கர்.