priya bavani sankar

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தற்போது கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

priya bavani sankar

பவானி சங்கர் என்றாலே குடும்பபாங்கான நடிகை என்று ரசிகர்கள் கொண்டாடிகொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார். இதில் டிரான்ஸ்பரண்டாக உடை அணிருந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உங்களை எங்களது கனவு கன்னியாக நினைத்திருந்தேன். ஆனால் இந்த போட்டோ மூலம் அதை நீங்கள் இழந்துவிட்டார்கள் என்று ரசிகர் ஒருவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பவானி சங்கர், உங்கள் அக்கறைக்கு நன்றி.ஒரு ஆணின் கனவுக் கன்னியாக வாழ்வதில் உடன்பாடில்லை. ஒருவர் புரொபைல் படம் வைத்தால் அதனை ஜூம் செய்து என்ன தெரிகிறது என பார்த்துவிட்டு பின் எதற்கு இப்படி பேசுகிறீர்கள். முதலில் நீங்கள் ஒழுக்கமாக இருங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.

Loading...