ஓரே ஒரு பாடல் மற்றும் டான்ஸ் மூலம் மிகவும் பிரபலமானது ஜிமிக்கி கம்மல் ஷெரில். அந்த வகையில் தற்போது மலையாள நடிகையின் புருவ டான்ஸ் அனைவரது கவனத்தை திரும்பி வருகிறது. மலையாள நடிகையின் மீதுள்ள மோகம் இன்னும் தீர்ந்தபாடியில்லை என்று தான் சொல்ல வேண்டும். யூடியூப் பாடல்களில் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். உலகளவில் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் எப்படி வைரலாகியது அதைப்போல ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் புருவ ஸ்டைல் டான்ஸ் தான்.

மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியா்.மாடலிங் பெண்ணான இவா் மலையாளத்தில் நடிகையாக ஜொலிக்க தொடங்கியுள்ளார். 18 வயதான இவா் திரிச்சூரைச் சோ்ந்தவா். பி.காம் படித்து வருகிறாராம். சின்ன வயதிலிருந்தே நடிப்பு என்றால் அவ்வளவு ஆசை. 12 ஆம் வகுப்பு படிக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் பிளஸ் என்ற காரணத்தால் அந்த வாய்ப்பு கைநழுவியது. அதன் பிறகு தான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தவரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

இந்த படமானது முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்குகிறார் உமர் லுலு. இவா் ஹேப்பி வெட்டிங், சங்க்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவா். இந்த படத்தின் மாணிக்க மலராய பூவி பாடலை வெளியிட்டுள்ளனா். அந்த பாடலில் பிரியா பிரகாஷ் காட்டும் முகபாவனைகள் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்துள்ளது. புருவத்தை உயா்த்தி இவா் சொல்லும் காதல் அருமை. இந்த பாடலை பிரபல நடிகரும் இயக்குநருமான வினித் சீனிவாசன் ஷான் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

இது தற்போது இணையதளத்தில் ட்டிரெண்டாகி வருகிறது. பிரியாவின் இந்த ரியாக்ஷனுக்கு ரசிக பட்டாளம் குவிந்து வருகிறது. ஷெரில் போல இவருக்கும் ஒரே நாளில் ஏராளனமான ரசிகா்கள் கிடைத்துவிட்டனா் அதுவும் ட்விட்டர் அக்கவுண்ட்யை நேற்று தான் ஆரம்பித்தவருக்கு ஏராளனமான ரசிகபெருமக்கள் உள்ளனா். இவரை அடுத்த நயன்தராவாக மாற்ற தமிழ் சினிமா விரைவில் கூப்பிட்டாலும் கூப்பிடலாம்?.