கண்ணடித்த ப்ரியா வாரியர் வழக்கு- தலைமை நீதிபதி கடும் கோபம்

அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு கண்ணடிப்பு பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். ஒருவர் பிரபலமாகி விட்டாலே வழக்குகளும் வம்புகளும் வந்து சேருமல்லவா அப்படியாக பிரியாவுக்கும் வம்பு வந்து சேர்ந்து விட்டது.

ப்ரியா கண்ணடித்தது முஸ்லீம்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருந்தது என்று கூறி தெலுங்கானாவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இஸ்லாமிய மார்க்கத்தில் கண்ணடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளி மாணவி சக மாணவனை பார்த்து கண்ணடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் ப்ரியா. இந்த செயல் தெய்வ குற்றம் ஆகும். அதனால் ப்ரியா, படத்தின் இயக்குனர் உமர் அப்துல் வஹாப், தயாரிப்பாளர் ஜோசப் ஈப்பன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து ப்ரியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ப்ரியா மீதான வழக்கை தள்ளுபடி செய்ததுடன் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி இனி எங்கும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ப்ரியா நிம்மதி அடைந்துள்ளார்.

ஒரு படத்தில் யாரோ பாட்டு பாடினால் உடனே வேலை இல்லாமல் வந்து வழக்கு தொடர்வதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற விசயங்களை கண்டித்துள்ளார்.