பாலிவுட்டில் பிஸியாகும் நம்ம ஊரு பொண்னு

2009 இல் வெளிவந்த ‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் பிறந்த ஊர் சென்னை என்றாலும் இவர் வளர்ந்த குடும்ப பின்னணி காரணமாக தமிழ், தெலுங்கு, மராத்தி இவருக்கு அத்துப்படி. வெளிநாட்டில் படித்தவர் என்பதால் ஆங்கிலம், ஸ்பாநிஷ் மொழிகளைப் பற்றி கேட்கவா வேணும். பெங்காலி, இந்தி மொழியும் சரளமாகப் பேசக்கூடியவர். இவர் நடிப்பு திறமை நம் அனைவரும் அறிந்ததே. மேல் படிப்புப் படித்த கையோடு மாடலிங் துறையில் நுழைந்து நியூட்ரின் மகா லாக்டோ, பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் காட்பரி டைரி மில்க் போன்ற விளம்பரங்களில் நடித்து பின் வாமணன் பட வாய்ப்பு மூலம் திரையுலகத்திற்கு வந்தார். இதுவரை ‘அரிமா நம்பி’, ‘வை ராஜா வை’, போன்ற படங்களில் 1980 ஆண்டுகளின் முக்கிய தமிழ் நடிகர்களின் மகன்களுடன் நடித்துள்ள இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வரும் நிலையில் அங்கேயும் ஒரு கைப் பார்க்கிறார் பிரியா.

ஏற்கனவே இவர் நடித்த ‘ஃபக்ரி’ நன்றாக ஓடி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று இப்போது அதன் இரண்டாம் பாகம் ‘ஃபக்ரி ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் நம்ம பிரியா. இந்தப் படம் பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

‘ஃபக்ரி ரிட்டர்ன்ஸ்’இவர் நடிக்கும் ஐந்தாவது பாலிவுட் படமாகும். இததான் பெரியவங்க அன்னைக்கே சொன்னாங்க “ஒன்றே செய், அதையும் நன்றே செய்’ னு. அம்மணிக்கு வாழ்துகளை தெரிவிச்சுக்குவோம்.