இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பல படங்களை ராஜமௌலி இயக்கியிருந்தாலும், அவர் இயக்கிய பாகுபலி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்தியாவின் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. அதேபோல், இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள் வரிசையில் ராஜமௌலியும் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  டீல் ஓவர்....திமுகவிற்கு தாவும் செந்தில் பாலாஜி...?

பாகுபலிக்கு பின் அவர் இயக்கும் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து 2 பாக்ஸர்களின் கதையை அவர் இயக்கப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தம் ஆகியுள்ளார். பருத்தி வீரனுக்கு பின் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, திருமணம் ஆகி அவர் செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  ராஜமவுலியின் அடுத்த படம் - பல தகவல்கள் உங்களுக்காக

இந்நிலையில்தான், ராஜமௌலி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே அவர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். அதேசமயம், மற்றொரு ஹீரோயினும் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.