இந்த இரவை மிஸ் செய்கிறேன்: கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட பிரியாமணி

priyamani

கோலிவுட்டில் பருத்தி வீரன் படத்தின் மூலம் பிரியாமணி அனைவராலும் அறிய பட்ட நடிகையானார். அந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற நடிகை. அதன் பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். எதிர்பார்த்தது போல முன்னணி நடிகையான வலம் வரமுடியவில்லை. இவரின் சினிமா மார்க்கெட் படிப்படியாக குறைந்து விட்டது. பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்றார். படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த வருடம் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

priyamanihusband

டான்ஸ் ஜோடி டான்ஸ் இரண்டாம் பாகத்தில் நடுவராக பங்கேற்றார். பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான முஸ்தபாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பருத்தி வீரன் படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணியை திரையுலகம் வழி அனுப்பி வைத்தது. திருமணத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரியாமணி. மலையாள படம் ஒன்றிலும், கன்னடத்தில் மூன்று படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆக மொத்தம் நான்கு படத்தில் நடித்து வருகிறார்.

piryamani instragram

இந்நிலையில் பிரியாமணி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் தனது கணவருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளதை வெளியிட்டு இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று பதிவுசெய்துள்ளார்.